2.0 படத்தை தொடர்ந்து நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கும் பணியை தொடங்கியுள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க மேலும், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisment

indian 2

ஷங்கர் இயக்கும் 14வது படமான இதை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் நடத்து வரும் பாபி சிம்ஹா நேற்று தனது 36வது பிறந்த நாளை இந்தியன் 2 குழுவினருடன் கொண்டாடினார். அதில், ஷங்கர் , விவேக், ஸ்டென்ட் மாஸ்டர் பீட்டர் மற்றும் பலர் கலந்து கொள்ள கமல் இன்று தன்னுடைய பிறந்தநாளை சொந்த ஊர் பரமக்குடியில் கொண்டாட உள்ளதால் மட்டும் மிஸ் ஆகியுள்ளார்.

Advertisment

miga miga avasaram

இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரில் தனது தந்தை ஸ்ரீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். உலகநாயகனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் சேனாதிபதி கதாபாத்திரத்தின் ஒரு படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.