style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' தற்போது இதே கூட்டணியில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கலை இயக்குனராக ஷங்கருடன் நண்பன், ஐ, 2.0 ஆகிய படங்களுக்கு பணியாற்றிய டி.முத்துராஜ் பணியாற்றவுள்ளார். முழு அரசியல் படமாக உருவாகிவுள்ள இப்படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கனை படக்குழு அணுகியிருப்பதாகவும், படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.