Published on 11/05/2020 | Edited on 11/05/2020

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் இன்று முதல் சில நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு.
இதைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்புகள் ஊரடங்கு முடிந்த பின் தொடங்கும் என லைகா நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கி இரண்டு வெவேறு இடங்களில் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.