indian 2

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மாதம் சில தளர்வுகளை அறிவித்து சினிமா இறுதிக்கட்ட பணிகளுக்கும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

Advertisment

இதற்கிடையே சென்னையில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்க தொடங்கியதால் 12 நாளுக்கு ஊரடங்கு உத்தரவைஅமல்படுத்தியது, அரசு. அதனால் சின்னத்திரை ஷூட்டிங்கிற்கும், சினிமா இறுதிக்கட்ட பணிகளும் ரத்தானது.

Advertisment

தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, மீண்டும் தளர்வுகள் அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் 'இந்தியன் -2' படமும் 'மூக்குத்தி அம்மன்' படமும் நாளை முதல் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன், சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பையும் நாளை (ஜூலை 8) முதல் தொடங்க அதன் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.