indian 2 movie new update

இயக்குநர்ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத்தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனாபரவல், இயக்குநர் ஷங்கருக்கும்தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது.இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

Advertisment

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும்இயக்குநர் ஷங்கருக்கும்இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தற்போது நடிகைகாஜல் அகர்வால்படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் கிச்சலு என்பவரைகடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டகாஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2315627a-5fac-4e95-b38a-06b1b3834872" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_17.jpg" />

இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிகை த்ரிஷாநடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், த்ரிஷா கூட்டணியில் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளது. மேலும், 'இந்தியன் 2' படத்தில்காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளது. விரைவில்இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.