/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_35.jpg)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தைவான் மற்றும் தென் ஆப்ரிக்கா பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள சில இடங்களை பார்வையிட்டு அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் இப்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல் தபேலா வாசிப்பது போல் ஒரு பாத்திரத்தை கொண்டு வாசிக்கிறார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இப்படத்தின் முக்கியமான காட்சிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசன் இந்தியன் 2 தவிர்த்து, மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)