/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/194_22.jpg)
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்தப் படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தியன் - 2படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.
இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில், "எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது" என கமல் பேசுகிறார். தொடர்ந்து உலகம் முழுவதும் ஊழல் நடப்பது போல் காட்டப்படுகிறது. அதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் வரும்படி அழைக்கின்றனர்.
மேலும் கம் பேக் இந்தியன் என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்குகின்றனர். இறுதியில் மக்களின் அழைப்பை ஏற்று கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து, "வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்" என பேசுகிறார். இந்த வீடியோ தற்போது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)