Advertisment

‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...’ - சவால் விடும் ‘இந்தியன்’

indian 2 first single paaraa released

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது.

Advertisment

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின்படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது.

Advertisment

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது. இன்று இப்பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பாடலின் ப்ரொமோ வெளியானது. ‘பாரா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் அனிருத் மற்றும் ஸ்ருதிகா பாடியுள்ளனர். பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார்.

ஏற்கனவே அறிவித்தது போல் தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருக்கும் இந்தியனை பற்றி இப்பாடல் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. பாடலில் வரும், ‘இது தாய் மண்மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை...’, ‘வெள்ளை ரத்தம் தொட்டு, இனி வாழில் ஏற்று சானை...’, ‘அடிமைகள் ரத்தத்துக்கு வெப்பம் தந்த வீர தீயே, அதிகார வர்கத்துக்கு அரைகூவல் நீயே...’ போன்ற அழுத்தமான வரிகள் இடம் பெறுகிறது. இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACTOR KAMAL HASSHAN anirudh director Shankar indian 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe