ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madhan.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் ஒருவரான துணை இயக்குனர் கிருஷ்ணா, பிரபல சினிமா திரைப்பட விமர்சகரும், கார்ட்டூனிஸ்ட்டுமான மதனின் மருமகன் ஆவார். கார்ட்டூனிஸ்ட் மதன் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர், அவருடன் இணைந்து அன்பே சிவம படத்தில் வசனம் எழுதியிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)