'India to England' - Prince Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டான்'. இப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடுகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கொடியையும் இங்கிலாந்து கொடியையும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 'ப்ரின்ஸ்' என தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில், சிவகார்த்திகேயனின் ஒரு கையில் உலக உருண்டையும் மறு கையில் புறாவை பறக்கவிடுவது போலவும் இருக்கிறார். அதோடு உலக நாட்டு கொடிகளும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment