/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/72_26.jpg)
'ஜெய் பீம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில்முடித்துள்ளார். இப்படம்தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்துநடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள்கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய இருபடங்களும்பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர்சூர்யாவுக்கு தங்கையாக இந்துஜா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்டைமையமாக வைத்துதான் இப்படத்தின் கதை நகர்வதால் சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா நடிக்கஉள்ளதாகவும், அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதாகவும்சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)