அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் விஸ்வாசம், ஆகஸ்ட் மாதத்தில் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் விஸ்வாசம் பிளாக்பஸ்டர் ஹிட், நேர்கொண்ட பார்வை ஹிட் என்று இரண்டுமே ஹிட்லிஸ்டில் சேர்ந்துள்ளது.

bigil

Advertisment

இதில் நேர்கொண்ட பார்வை, ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதனை தமிழில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கினார். இதில் டாப்ஸி கதாபாத்திரத்திற்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்தது. மேலும், இதில் இவரின் நடிப்பிற்கு பல விருதுகளும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை இந்துஜா தானாம். ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக ஒரு பேட்டியில் இந்துஜா கூறியுள்ளார். ஒரு நல்ல கதாபாத்திரத்தை மிஸ் செய்துவிட்டீர்களே என்று அஜித் ரசிகர்கள் மற்றும் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.