Skip to main content

பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

independence day celebration

 

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நேற்று (15.8.2022) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்ற, மற்ற மாநிலங்களில் அந்தெந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றி வெகு விமர்சையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்கள். திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வீட்டில் கொடியேற்றிக் கொண்டாடினர். 

 

அந்த வகையில்  பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் சார்பில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மீடியா 95 பழனி ராஜ் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசியக்கொடி அவமதிப்பு; வைரலாகும் வீடியோ

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Indian national flag to wipe the vehicle..

 

டெல்லியில் தனது இருசக்கர வாகனத்தை இந்திய தேசியக் கொடியால் ஒருவர் துடைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையொட்டி பெருமளவு மக்கள் தேசியக்கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளில் ஏற்றி வைத்தனர். மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்று தீர்ந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

 

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க நபர் தனது இருசக்கர வாகனத்தை மடித்து வைக்கப்பட்ட தேசியக்கொடியை வைத்து துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை எனவும் தவறுதலாக நடந்துவிட்டது எனவும் கூறினார்.

 

 

Next Story

'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்'; தேசிய கொடியில் சர்ச்சை வாசகம் - ஆசிரியர் கைது

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Teacher arrested for flying 'Jesus blesses India'-controversial slogan on national flag!

 

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் வீடுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து Har Ghar Tiranga என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல்  பிரபலங்கள், மக்கள் என பல தரப்பிலிருந்து பலரும் தேசியக் கொடியை ஏற்றி செல்ஃபி எடுத்து பதிவேற்றி இருந்தனர்.

 

Teacher arrested for flying 'Jesus blesses India'-controversial slogan on national flag!

 

இந்நிலையில் திருப்பூரில் 'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என தேசியக் கொடியில் எழுதி வீட்டில் பறக்கவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் எபின் என்பவர் சர்ச்சைக்குரிய வாசகத்தை தேசியக் கொடியில் எழுதி பறக்கவிட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் புகாரளிக்க, தேசியக் கொடியை அவமதித்தற்காக எபினை போலீசார் கைது செய்தனர்.