Advertisment

பாடகரின் கொடூர கொலையை தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Increased police security Salman Khan over threats

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும்,பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலாகொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ்பிஷ்னாய்சேர்க்கப்பட்டுள்ளார். பாடகர் சித்து மூஸ் வாலாகொலை செய்யப்பட்ட பின்னர் சமூக வலைதளப் பக்கத்தில்உள்ள லாரன்ஸ்பிஷ்னாயின்குழு பக்கத்தில் இந்த கொலைகூட்டாளி விக்கியின் கொலைக்கு பதிலடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வவகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டுகள் நடைபெற்றவழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வகைமான்களைபிஷ்னாய்சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு லாரன்ஸ்பிஷ்னாய்இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார்.

Advertisment

பாடகர்சித்து மூஸ் வாலாவின் கொடூர கொலையை தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்த மிரட்டல் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து சல்மான் கான் வசிக்கும் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Bollywood Salman Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe