Advertisment

சன்னி லியோன் நிகழ்ச்சி; குண்டு வெடித்ததால் பரபரப்பு

incident happened at near Sunny Leone’s fashion show venue in Manipur

பிரபல நடிகை சன்னி லியோன், தற்போது இந்தி, தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கலை, கடை திறப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சன்னி லியோன்.

Advertisment

அந்த வகையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நாளை (05.02.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் திடீரென குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர், "அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் எந்த வித உயிர்ச்சேதமும் அருகில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை" எனத்தெரிவித்துள்ளனர். மணிப்பூர் பகுதியில் இந்தி திரைப்படங்களை மற்றும் அதன் இசையையும் ஆதரிப்பவர்களைத்தொடர்ந்து சில குழுக்கள் குறி வைத்து வருவதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை காதி பொருட்கள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

sunny leone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe