/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athulyaravini.jpg)
‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன் பின்னர் இவர், ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடுபோயியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதுல்யா ரவியின் தாயான விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை பார்க்கும் செல்வி(46) என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,500 பணத்தை கைப்பற்றினர். மேலும், அவர்களிடம் பாஸ்போர்ட் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)