Advertisment

பள்ளி மாணவிக்கு பாடும் வாய்ப்பு - உறுதியளித்த இமான்

imman promising chance for a schoolgirl to sing in his music

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான், கைவசம் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில், யோகி பாபுவின் மலை, சமுத்திரக்கனியின் பப்ளிக் உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். இதனிடையே தன்னுடைய படங்களில் ஆதரவற்ற ஏழை எளிய மற்றும் மாற்றுத் திறானாளி பாடகர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் நன்றாக பாடும் வீடியோக்கள் வைரலானால் அவர்களின் முகவரியை கேட்டு உடனே பாட வாய்ப்பளித்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் ஒரு பள்ளி மாணவி பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனே அந்த மாணவியின் முகவரியை கேட்டு பதிவிட்டார். இந்த நிலையில் அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் பேசி வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளார். அம்மாணவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி எனத்தெரியவந்துள்ளது. அவர் 7 ஆம் வகுப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. பின்பு அம்மாணவியின் தந்தையாரிடம் தொலைப்பேசி வாயிலாக அழைத்து மாணவியை பாராட்டி தனது இசையில் பாட வாய்ப்பு வழங்குவதாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe