ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமான்!

12:33 PM Jul 12, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினியின் ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘சூர்யா 40’, பிரபுதேவாவின் ‘பொன்மாணிக்கவேல்’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பிஸியாக இசையமைத்துவரும் இமான், தன்னுடைய அடுத்த படத்தில் ஆதித்யா சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனுக்குப் பாட வாய்ப்பளித்துள்ளார். ஆதித்யா சுரேஷ் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் பாடுவதற்கு இமான் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். சிறுவன் ஆதித்யா சுரேஷ், சஹானா என்ற சிறுமியுடன் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலுக்கு யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார். இத்தகவலைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இமான் தெரிவித்துள்ளார்.

‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே...’ பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் இசையமைத்த ‘சீறு’ படத்தில் பாட இமான் வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT