imman helped people affected by cyclone michaung

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாகப் பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் சார்பில், சென்னை சத்யா நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கி உதவி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.