திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சி போன்றவற்றில் அருமையான நெல்லை தமிழ் உடன் நகைச்சுவையாகபேசிரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இமான் அண்ணாச்சியைநக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் நம்முடன் பகிர்ந்துக்கொண்டவை பின்வருமாறு...
“முதன் முதலில் நான் சென்னைக்கு வந்த பிறகு இயக்குநர்கௌதமன் ஆட்டோ சங்கர் என்றதொடரில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் நல்லாநடித்ததன் காரணமாகவீரப்பன் தொடரானசந்தனக்காடு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக எனக்கு ஆதித்யா சேனலிலிருந்துஅழைப்பு வந்தது.அங்கு சொல்லுங்கண்ணே...சொல்லுங்க என்ற ஒரு நிகழ்ச்சி பண்ணேண். தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு சென்று நடத்திய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது.
அந்த மாதிரி நேரத்தில் ஒரு நாள் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் சாருக்கு அவரது நண்பர் ஒருவர் போன் பண்ணி, ‘சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க நிகழ்ச்சியில் நெல்லை தமிழ்லகாமெடி பண்ணிட்டு இருக்குறாரேநீ பாத்தியாஎன்று கேட்க, அவரு இன்னும் இல்லப்பா, அது என்னன்னு பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு, என்னுடைய நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அதன் பிறகு சன் டிவிக்கு ஒரு நிகழ்ச்சி பண்ணிக் கொடுக்கச் சொல்லி அழைப்பு வந்தது. நானும் அதனையேற்று சன் டிவிக்கு போனேன், அண்ணாச்சி இது குழந்தைகளை வைத்து பண்ற ஷோ செம்மையா உங்க பாணியில் பண்ணிக்கொடுத்துடுங்கன்னு சொன்னாங்க. ஆனால் ‘இது என்னால் முடியாது, பெரியவங்க கிட்ட பேசவே பெரும்பாடுபட்டு இருக்கேன், இதுல குழந்தைகள் கிட்ட எல்லாம் என்னால் பேச முடியாது ஆளா விடுப்பா சாமின்னு’ சொன்னேன். ஆனால் அந்தப்ரோக்ராம் ஹெட், ’இல்ல சார் இந்த நிகழ்ச்சியைவடிவேலு சார்தான் பண்ணப்போறாங்க, அதற்கான பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு. அதுக்கு ட்ரையல் ஷோ மட்டும் நீங்க பண்ணி கொடுங்கன்னு’ சென்னார். சரி நானும் ட்ரையல் தானேஎன்று நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன். ஷூட்டுக்கு எல்லாரும்ரெடியாகி வந்தாங்க, ஷூட்டிங்கும் ஆரம்பிச்சாங்க, என்கிட்ட வந்து சொன்னங்க, ‘எப்படி இருக்கீங்க, எங்க இருந்து வரீங்கன்னு’ அமைதியா கேளுங்கன்னு சொன்னாங்க, நமக்குத்தான் அதெல்லாம் வராதே. நான் எடுத்தவுடனேயே, 'ஏலேய் உன் பேரு என்ன... ஏலேய் உன்னைத்தான், என்ன பேந்த பேந்தன்னுமுழிக்கிறன்னு’ கேட்டேன். எல்லாம் என்ன ஒரு மாதிரி பார்த்தங்க, குழந்தைகள் கிட்டஇப்படி எல்லாம் பேசலாமான்னு. அப்படியே அந்த ஷூட்ங்கமுடித்துவிட்டு வீட்டுக்கு போயிட்டேன்.
அடுத்தநாளேஎனக்கு சன் டிவியிலிருந்து கால் வந்துச்சு. இந்த நிகழ்ச்சியை நீங்க மட்டும் தான் பண்ணனும்னுமேல இருந்து சொல்லிட்டாங்கநீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது, நீங்கதான் பண்ணனும்ன்னு சொல்லிட்டாங்க. குழந்தைகளை வச்சு என்னையாபண்ணமுடியும், அப்படி இப்படின்னாலும் மூணு எப்பிஸோடதாண்ட முடியாதுன்னு சொன்னேன். ஆனால் அவங்க விடவே இல்லை பண்ணாநீங்கதான் பண்ணனும்னுபிடிவாதமாக இருந்தாங்க. அப்படிபண்ணதுதான் இந்த குட்டிசுட்டீஸ் ஷோ. கடைசியிலபார்த்த இது பயங்கரமாக ஹிட்டாயிடுச்சு".