Advertisment

'லெவன்' படத்திற்காக இமான் இசையில் பாடிய ஆண்ட்ரியா 

imman andrea song

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் 'லெவன்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். 'சரபம்', 'சிவப்பு', 'பிரம்மன்','ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் 'கேம் சேஞ்ச‌ர்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisment

'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Advertisment

இப்படத்திற்காக 'தமுகு' எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Andrea Jeremiah d.imman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe