Advertisment

குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட தம்பதி; தத்தெடுத்த இமான்

imman adopted a child

2002-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக டி.இமான். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார். அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்.

Advertisment

இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இமான். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். இதையடுத்து அமலி என்பவரை 2022ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார்.

Advertisment

இந்த தம்பதிகள் தற்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். கண் பார்வையற்ற தம்பதிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் ஏற்கனவே முதல் பெண் குழந்தையை வளர்க்க சிரமப்படுவதால் ,அதை அறிந்த இமான் அவர்களுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை பெற்றோரின் சம்மதத்தோடு தத்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

d.imman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe