/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/91_21.jpg)
ஐ.எம்.டி.பி.,உலகத்திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இருப்பதுபடங்களுக்குஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த இணையதளம் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் ‘டாப் 10’ குறித்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில்தனுஷ் உள்ளார். இதனைத்தொடர்ந்து 2வது இடத்தில் நடிகை ஆலியா பட், 3வது ஐஸ்வர்யா ராய் பச்சன், 4வது ராம் சரண், 5வது சமந்தா, 6வது ஹிருத்திக் ரோஷன், 7வது கியாரா அத்வானி, 8வது ஜுனியர் என்.டி.ஆர், 9வது அல்லு அர்ஜுன், 10வது யஷ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
தனுஷ் முதல் இடத்தைப் பிடித்துள்ளதை ஒட்டி அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வருடம் தனுஷ் நடிப்பில் 'மாறன்', 'தி கிரே மென்', 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' என மொத்தம் நான்கு படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்போது இவர் நடிப்பில் 'வாத்தி' மற்றும் 'கேப்டன் மில்லர்' படங்கள்உருவாகி வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)