Advertisment

மீண்டும் ஆரம்பமாகும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'...ஷங்கரும், வடிவேலுவும் சமரசம்? 

24th pulikesi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்கவிருந்த 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியில் நின்று போனது. இதனால் படப்பிடிப்பிற்காக 6 கோடி மதிப்பில் போடப்பட்ட அரண்மணை அரங்குகள் வீணாயின. மேலும் இப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று வடிவேலு மறுத்து விட்டார். இதையடுத்து அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார். இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதற்கு வடிவேலு தரப்பில் உடன்படாத நிலையில் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததாக தகவல் வெளியானது. இதனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். இந்நிலையில் ஷங்கருக்கும், வடிவேலுக்கும் தற்போது சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும், மீண்டும் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

shankar vadivel 24thpulikesi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe