style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' பட தயாரிப்பாளர் கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார் அடுத்து தயாரிக்கும் 'இமைக்கா நொடிகள்' படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா - ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க, அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா. பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் 'விளம்பர இடைவெளி' என்ற பாடல் இணைய தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">