"நான் ரொம்ப பிஸி" - தென்னிந்திய படங்கள் குறித்த கேள்விக்கு குதர்க்கமாக பதிலளித்த நவாஸுதீன் சித்திக்

I'm too busy

இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாஸுதீன் சித்திக். ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய படங்கள் எதுவும் நான் பார்த்ததில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் இதனை கூறியிருக்கிறார். அதில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 போன்ற தென்னிந்திய படங்கள் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் நான் தென்னிந்திய படங்கள் எதுவும் பார்த்ததில்லை. தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது வணிக படங்களும் பார்ப்பதில்லை. மேலும், நான் பிஸியாக இருப்பதால் படங்கள் பார்க்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் இப்படங்களின் வெற்றி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது" என பதிலளித்துள்ளார்.

nawazuddin siddique
இதையும் படியுங்கள்
Subscribe