நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
அண்மையில் சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் அடுத்து யாருடன் இணைந்து படம் நடிக்க போகிறார் என்ற தகவல் மாஸ்ட பட ஷூட்டிங் தொடங்கியதிலிருந்தே உலா வருகிறது. பல முன்னணி இயக்குனர்கள் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்துதான் அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று வதந்தி பரவியது.
இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் நான் அடுத்து தளபதி 65 படத்தை இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.