'பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது' - #MeToo வில் இலியானா காட்டம் 

ileana

'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் 'நண்பன்' படம் மூலம் பிரபலமான இலியானா தற்போது ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவருக்கு திருமணமாகி கர்பமாகிவிட்டார் என செய்திகள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்தும், 'மீடூ' குறித்தும் பேசியுள்ளார். அதில்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெண்களின் கசப்பான அனுபவங்களை ‘மீடூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீடூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீடூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து நான் தற்போது பேச விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூவுடன் உள்ள உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் என்னால் பேசமுடியாது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

ileana d cruz metoo
இதையும் படியுங்கள்
Subscribe