நண்பன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை இலியானா தன் அடுத்த பட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது....

''நான் ஜான் ஆபிரகாமுடன் நடித்துள்ள பாகல் பண்டி ஹிந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் நான் முழுமையான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஏற்கனவே முபாரகன் என்ற படத்தில் முதல் தடவையாக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். என்னை பற்றி சிந்திக்கும்போது ரசிகர்களுக்கு நகைச்சுவை மனதில் வராது. இலியானா கவர்ச்சியான நடிகை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல் தடவையாக முபாரகன் படத்தில் காமெடியில் நடித்ததும் உங்களை இப்படி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாகவும் ஆசையாகவும் உள்ளது. அதற்காக சவாலான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்” என்றார்.