கடந்த 2006ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் கேடி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. இதன்பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய்யுடன் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்தார்.

Advertisment

ileana d cruz

கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை தீவிரமாக காதலித்தார் இலியானா. பின்னர், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக்கப் செய்துகொண்டனர்.

பிரேக்கப்புக்கு பின்னர் காதல் வலியில் இருந்து மீள மிகவும் கஷ்டப்பட்ட இலியானா, சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்ட இலியானா தனக்கு வந்த பட வாய்ப்புகளையும் தவரவிட்டார். தற்போது எப்படி இதிலிருந்து மீண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில், “வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன். மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன்” என்றார்.