Advertisment

"உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இளையராஜா பதில் 

ilaiyaraaja with AR Rahman

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு மார்ச் இறுதிவரை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இசைக்கச்சேரியும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் அனிருத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு இசைக்கச்சேரி நடத்தியிருந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதற்காக துபாய் வருகை தந்திருந்த இளையராஜா, இசைக்கச்சேரியை முடித்துவிட்டு துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான், எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவிற்காக இளையராஜா இசையமைப்பார் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள இளையராஜா, உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்தப் பதிவுக்கு ட்விட்டரில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

ar rahman ilayaraaja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe