Ilayaraja - Yuvan to music for Venkat Prabhu movie ; Official announcement release

Advertisment

தமிழ் சினிமாவில் தன் காமெடி கலந்த கதைசொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்த வகையில் கடைசியாக அசோக் செல்வனை வைத்து 'மன்மதலீலை' படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து நாக சைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படம் இயக்கவுள்ளார். 'என்.சி 22' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் 'என்.சி 22' படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இரண்டாவது முறையாக இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். முதல் முறையாக சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 'என்.சி 22' படத்தின் கதாநாயகி அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி தெலுங்கில் தற்போது பிரபலமாக இருக்கும் கிர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

Advertisment