சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா நேற்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வு குறித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னிடம் சில வேண்டுகோள்களை வைத்தார்.
சங்கத் தமிழ் நூல்களை அவர் வரிசையாகச் சொன்னது. அந்த நூல்கள் எனக்குக் கூட தெரியாது. பதிற்றுப்பத்து, பதினேன்மேற்கணக்கு நூல்கள் என அத்தனையையும் அவர் மனப்பாடமாக இல்லாமல், இயல்பாக அவர் சொன்னது எனக்கு மிகவும் வியப்பை அளித்தது. அதற்கு நான் இசையமைக்க வேண்டும் என்று அவர் சொன்னது உங்களைத் தவிர வேறு யாரும் அதைச் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னது எனக்கு மேலும் மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று சொல்லிக்கொள்கிறேன். மற்றபடி விழாவில் எந்த ஒரு குறையும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.
இந்த விழாவிற்கு மகுடம் வைத்தவர்கள் போல விழாவிற்கு வந்தவர்கள் சிம்பனி எப்படி இருந்தது என்றும் அல்லது எங்களுடைய திரையுலக வாழ்க்கை 50 வருட வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் அதில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் சொன்னது எனக்கு ஒரு சிறு ஒரு சிறு விஷயமாகச் சிறு விஷயமாக இருந்தாலும் அது ஒரு விஷயமாக எனக்குப் பட்டது. இது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். பல மேடைகளிலேயே ரஜினிகாந்த்தும், கமலஹாசனும் நீங்க அவருக்கு மட்டும் நல்ல பாட்டு போடுகிறீர்கள் அப்படியென்று கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு மட்டும் நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்றும் ரஜினி நீங்க அவருக்கென்றால் நல்ல பாட்டுதான் போடுவீர்கள் அப்படியென்று சொல்லுவார். இதிலிருந்து இது என்ன தெரிகிறது என்றால் இரண்டு பேருக்கும் நல்ல பாட்டு போட்டிருக்கிறேன் என்பதற்கு அவர்கள் இருவருடைய வார்த்தைகளே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.