Advertisment

“என் மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” - இளையராஜா உருக்கம்

Ilayaraja said no to the birthday celebration due to the lost of his daughter

Advertisment

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று 80 வயதை கடந்து 81 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலை முதலே இளையராஜாவின் வீட்டின்முன்பு திரண்டனர். பின்பு ரசிகர்களை சந்தித்த இளையராஜாஅவர்களின் வாழ்த்தினை பெற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறீர்கள். என் மகளை பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை; உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்” என்று உருக்கமாக தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe