ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்திலும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் திடீரென்று ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன, குழந்தைகள் வயதானவர்கள் கதறி அழுது தவித்தனர். அந்தக் காட்சிகள் தமிழக மக்களை அதிரச்செய்தன. பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சம்பவம் குறித்து தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாடலின் சில வரிகளை பதிவு செய்து, மருதநாயகம் படத்துக்காகத் தானும் இளையராஜாவும் இணைந்து எழுதிய அந்தப் பாடல், இன்றும் அரியலூர் பொன்பரப்பி சம்பவத்துக்கும் பொருந்திப்போவது தமிழ் இனத்துக்கே பெரும் அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.