Ilayaraaja will make special program announcement tomorrow

Advertisment

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாதுஉலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்டபயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர்சமீபத்தில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் மோடியை அம்பேத்கருடன்ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியதோடு, பொது வெளியில் விவாதத்திற்கும்உள்ளானது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாளை மாலை6 மணிக்கு முக்கியமானநிகழ்வு குறித்தஅறிவிப்பைவெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது சினிமா குறித்த அறிவிப்பாஇல்லை, வேறும்ஏதேனும் அறிவிப்பா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.