Advertisment

"நலமாக வர வேண்டும் சகோதரரே" - கமல் உடல்நிலை குறித்து இளையராஜா ட்வீட்

ilayaraaja tweet about kamalhaasan health

Advertisment

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d4e1aa6f-9a10-4849-a022-2ac1866b382a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_44.jpg" />

இந்நிலையில், இசைஞானி இளையராஜா கமல்ஹாசன் நலம் பெற வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நலமாக வரவேண்டும் சகோதரரே, கலை உலகை ஆ……ஹா……என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor kamal hassan covid 19 ilayaraaja kamalhaasan
இதையும் படியுங்கள்
Subscribe