/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/289_15.jpg)
டிமான்ட்டி காலனி 2 படத்தை தொடர்ந்து, பிடிஜி யுனிவர்சல் தயாரிக்கும் அடுத்த படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், பிபின், ஹுசைனி,
உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது. அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
நிகழ்ச்சியில் இளவரசு பேசுகையில், “தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர், நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் டி. இமான் இன்று வளர்ந்து தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் வைபவ் பார்ப்பதற்கு தான் அமைதியான ஆள் ஆனால் பயங்கர சேட்டைக்காரர். அதுல்யா, நடன இயக்குனர் அஜய் ராஜ் மற்றும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல சினிமாக்களை ஆதரியுங்கள். அவை வெற்றி அடைய உதவும் வகையில் நல்ல விமர்சனங்களை எழுதி தமிழ் சினிமா முன்னேற ஊடகவியலாளர்கள் உதவி புரிய வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், “பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். வைபவ்,அதுல்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)