Ilaiyaraja

Advertisment

உலகத்திற்கு ஒரே ஒரு சூரியன் இருப்பதுபோல, திரைத்துறைக்கும் ஒரே ஒரு இளையராஜா, ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே ஒரு பி.வாசுதான் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காதல் செய் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

விழாவில் பேசிய இளையராஜா, “காலகாலத்துக்கும் இளையராஜா, பி.வாசு, பாரதிராஜா உருவாகிக்கொண்டே இருப்பர்களா என்றால் இல்லை. என்றைக்கும் ஒரே ஒரு இளையராஜா, பி.வாசு, பாரதிராஜாதான். உலகத்திற்கு ஒரே ஒரு சூரியன் இருப்பதுபோலத்தான் இதுவும்.

இந்தப் படத்தை எடுக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம், இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்றார்கள். படம் எடுப்பவர்கள் கஷ்டப்படலாம். பார்ப்பவர்கள்தான் கஷ்டபடக்கூடாது.படத்திற்கு காதல் செய் என்று அழகான பெயர் வைத்துள்ளார்கள். என்னைவிட அதிகமாக யாரும் காதலிக்க முடியாது. ஆனால், எதைக் காதலிக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.