Advertisment

இளையராஜாவின் ஹிட் பாடலை உபயோகித்த சந்தானம்!

zgdzgd

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்த படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. தற்போது இந்த பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. இப்பட ட்ரெய்லரும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக 'டிக்கிலோனா' உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisment

கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணனன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப்,ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். இப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Santhanam harabhajan singh dikkiloona
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe