Advertisment

"ரெண்டெல்லாம் இல்ல... ஒரே சூப்பர்ஸ்டார்தான்" - சுஹாசினியை கண்டித்த இளையராஜா!

rajini

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 'இளையராஜா 75' நிகழ்ச்சி இரண்டு நாட்களாக கோலாகலமாக நடந்தது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது மேடையேறிய ரஜினிகாந்த் இளையராஜாவின் இசை தனக்கு எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு இளையராஜாவின் ஆன்மீகமும் தனக்குப் பிடிக்கும் என்று கூறினார். அதனால்தான் தான் இளையராஜாவை எப்பொழுதும் சாமி சாமி என்று அழைப்பதாகவும் கூறினார். ரஜினிகாந்த் இளையராஜா இருவருமே திருவண்ணாமலை அண்ணாமலையார் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுஹாசினி மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள் ஒருவர் நடிப்பில் சூப்பர் ஸ்டார் இன்னொருவர் இசையில் சூப்பர் ஸ்டார் என்று கூற அதை மறுத்த இளையராஜா மேடையில் இருக்கிறோம் என்பதற்காக இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சுஹாசினியை அன்பாக கண்டித்து தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்று உறுதியாகக் கூற மைதானம் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலால் அதிர்ந்தது.

Advertisment

rajinikanth ilaiyaraja 75
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe