கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸானது. இப்படத்தை மிஷ்கின் இயக்க, விஷால் நடித்திருந்தார். கணியன் பூங்குன்றன் என்ற துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருந்தார்.

Advertisment

vishal with ilaiyaraja

இதில் விஷாலுக்கு ஜோடியாக நு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், சிம்ரன் என பலர் இதில் நடித்திருந்தனர்.

Advertisment

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைத்தார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஷால் திரைத்துறைக்கு வந்து நேற்றுடன் 15வது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில், துப்பறிவாளன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இளையராஜா இசையமைக்கிறார். இதுதான் இளையராஜா விஷால் படத்திற்கு இசையமைக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.