Advertisment

காப்புரிமை பிரச்சனைக்கு பின் ஒரே மேடையில் இளையராஜா, எஸ்.பி.பி... ரசிகர்கள் உற்சாகம்...

பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பின்னர் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாட இருக்கிறார்.

Advertisment

spb with illaiyaraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

2017ஆம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா,எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து நான் இனி இளையராஜா பாடல்களை மேடையில் பாட மாட்டேன். வேறு சில இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை நான் இனி மேடைகளில் பாடுகிறேன் என்றார். பின்னர், என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை நான் இளையராஜா படல்களை மேடையில் பாடுவேன் என்று எஸ்பிபி கூறினார்.

இந்நிலையில், வரும் ஜூன் 2 அன்று தன்னுடைய பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ ஆகிய பாடகர்கள் பாடவுள்ளார்கள். சென்னை - செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்பிபியும் மீண்டும் தோன்றுவது இசை ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe