இசைமேதை என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் நாற்பது வருடங்களுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். அங்குதான் இளையராஜா பாடல் பதிவு, இயக்குனர்களை சந்திப்பது என்று தனது திரைப்பட வேலைகளை செய்து வருகிறார்.

Advertisment

ilaiyaraja barathiraja

அண்மையில் பிரசாத் ஸ்டூடியோஸ் இயக்குனர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் அந்த கட்டடம் மூடப்பட்டது. இதனால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோஸுக்கு செல்லாமல் இருந்தார் இளையராஜா.

Advertisment

இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தைக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சென்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்போது பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா இவர்கள் 5 பேரை சுமூக பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டனர்.