தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட 'இசையராஜா 75' விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இத்தனை ஆண்டு காலம் இசையில் தொடர் சாதனை புரிந்து வரும் 'இசைஞானி' இளையராஜாவைப் கௌரவிக்கும் பொருட்டு இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'இசையராஜா 75' விழாவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழ் திரையுலக பிரமுகர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்த பிரம்மாண்ட விழா பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெறுகிறது. விழா நடைபெறும் குறிப்பிட்ட 2 நாட்களுக்கு அனைத்து படப்பிடிப்பிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.