producer council

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5 முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த உள்ளனர். மேற்படி விழாவானது, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் திரு.இளையராஜா அவர்களுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருப்பதால் மேற்படி பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுகொண்டுள்ளனர்.