இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
இசைஞானி இளையராஜாவுக்கு 75 வயது ஆகிறது. அதை முன்னிட்டு கௌரவப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் இளையராஜா 75 என்று நிகழ்ச்சி ஒன்றை ஃபிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதி நடத்த இருக்கிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து, இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சதீஷ்குமார் இந்த நிகழ்ச்சி நடைபெறவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். இந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவர்களை போட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.