Advertisment

இளையராஜா சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி அப்டேட் 

ilaiyaraajaa Symphony Live Performance update

நான்கு தசாப்தங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா, கடைசியாக தமிழில் வெளியான ஜமா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதையடுத்து விடுதலை 2 படத்தில் பணியாற்றி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தவிர்த்து தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

முன்னதாக கடந்த மே மாதம் 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் என்னுடைய முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிக்கெட் விற்பனை குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Ilaiyaraaja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe