இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாதுஉலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்டபயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், இந்தியாதொடங்கி பல்வேறு நாடுகளில் இசை கச்சேரிகள் நடத்திவருகிறார். இதற்கு ஏராளமான ரசிகர்கூட்டமும் உண்டு.
இந்நிலையில் 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி வரும் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவுடன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துபாடல்களைபாடவுள்ளனர். "எனது கனவு நனவாகப் போகிறது" எனக் குறிப்பிட்டு இத்தகவலைஇசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைரீட்வீட் செய்த இளையராஜா "உன்னை மேடையில் சந்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
see you on stage ? @ThisIsDSPhttps://t.co/9QQ24XJh2S
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 16, 2022