Advertisment

ஸ்ரேயாவுடன் கூட்டணி அமைக்கும் இசைஞானி இளையராஜா!

jvgjghg

திருமணத்திற்குப்பிறகு நடிகை ஸ்ரேயாசரண் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார். இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் 'கமனம்'படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜவாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக 'கமனம்'படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது. நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் 'கமனம்'படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார்.

Advertisment

இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞானசேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 'கமனம்' படத்தின் முழுபடப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

shreya shriyasaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe